4 மாத லிவ்-இன் காதலனுடன் சேர்ந்து போட்ட ‘ஸ்கெட்ச்’… பெற்றோர் வீட்டிற்கே உலை வைத்த 18 வயது மகள்… சிசிடிவி ஆதாரத்தால் அம்பலமான பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

4 மாத லிவ்-இன் காதலனுடன் சேர்ந்து போட்ட ‘ஸ்கெட்ச்’… பெற்றோர் வீட்டிற்கே உலை வைத்த 18 வயது மகள்… சிசிடிவி ஆதாரத்தால் அம்பலமான பகீர் உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 18 வயது இளம்பெண் தனது லிவ்-இன் காதலனுடன் சேர்ந்து தனது சொந்த வீட்டிலேயே ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த திடுக்கிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாக்ஷி என்ற அந்த இளம்பெண், கடந்த 4 மாதங்களாக உஜ்ஜவல் த்விவேதி என்ற வாலிபருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலன் மற்றும் அவனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து, சொந்தப் பெற்றோர் வீட்டிலேயே திட்டமிட்டுப் பெருந்தொகையைக் கொள்ளையடித்துள்ளார். வீட்டில் கொள்ளை நடந்ததைத் தொடர்ந்து புகாரளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு இந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.

Advertisement

இதையடுத்து சாக்ஷி மற்றும் அவரது காதலன் உஜ்ஜவலைக் கைது செய்த பிரயாக்ராஜ் காவல்துறையினர், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்ற மகளே சொந்த வீட்டைக் கொள்ளையடித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவளுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in