LATEST NEWS
“மெலனியாவை எங்கே கொல்வது?” ஈரான் வெளியிட்ட பகீர் வீடியோ.. ஆடைகளில் விஷம்.. வலம் வரும் கார்டுகள்.. டிரம்பின் வாரிசுகளுக்கு நேரடி மரண எச்சரிக்கை.!!
ஈரான் அண்மையில் “மெலனியாவை எங்கே கொல்வது” என்ற தலைப்பில் ஒரு புதிய காணொளியை வெளியிட்டு, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் மற்றும் அவரது மகன் பேரன் டிரம்ப் ஆகியோரை நேரடியாக அச்சுறுத்தியுள்ளது. அந்த காணொளியில், மெலனியா டிரம்ப் நியூயார்க் நகரில் தனது பாதுகாப்பு வாகனப் பேரணியில் பயணிக்கும் காட்சிகளும், அவர் பொருட்கள் வாங்கும் ஆடம்பர வடிவமைப்பாளர் கடைகளும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இந்த இடங்கள் உலகளாவிய விடுதலைப் போராளிகளின் தாக்குதலுக்கு உகந்தவை என்றும், அவர் வாங்கும் ஆடைகளில் நச்சு இரசாயனங்களைதடவி அவரை விஷமாக்கலாம் என்றும் அக்காணொளி பரிந்துரைக்கிறது. மேலும், “பேரன் டிரம்ப், எங்களுக்காகக் காத்திரு” என்ற நேரடி எச்சரிக்கையுடன் அக்காணொளி நிறைவடைகிறது.
இணையவழி அச்சுறுத்தல்கள் மட்டுமன்றி, ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் பொதுமக்களின் பார்வையில் படும்படி ஆக்ரோஷமான விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஜோம்ஹூரி வீதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட பலகையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் கழுத்தை பல கைகள் நெரிப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளதுடன், “பழிவாங்குவது நிச்சயம்” என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா, எரிக், டிஃப்பனி மற்றும் பேரன் உள்ளிட்ட டிரம்பின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இரத்தத்திற்கு இரத்தம்” என்ற எச்சரிக்கையுடன் அவர்களது மரணத்திற்கு அழைப்பு விடுக்கும் பலகைகளும் நகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், மெலனியா மற்றும் பேரன் டிரம்ப் ஆகியோருக்கு அமெரிக்க ரகசிய சேவைபிரிவு முழுநேரப் பாதுகாப்பை வழங்கி வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் மெலனியா டிரம்ப் அண்மைய பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு நடவடிக்கையில் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்ட பிறகு, டிரம்ப் ஈரானின் முதன்மை இலக்காக மாறியுள்ளார். இதன் காரணமாக அவர் தனது விமானப் பயணங்களை மாற்றியமைத்துள்ளதோடு, தனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் ஈரானை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாகத் தாக்க வேண்டும் என அமெரிக்கப் படைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
