LATEST NEWS
“அவங்க சொன்னதைத்தான் செஞ்சேன்!” – விமானத்தை ரகசியமாக மாற்றியது ஏன்.? எனக்கு தினமும் கொலை மிரட்டல் வருது… நான் பயப்படவே மாட்டேன்… ஈரானுக்கு டிரம்ப் பதிலடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியின் அங்காராவிலிருந்து வாஷிங்டன் திரும்புவதற்காக விமானத்தில் ஏறினார். ஆனால், ஈரானிடம் இருந்து வந்த தீவிரமான கொலை மிரட்டல் காரணமாக, அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான ‘சீக்ரெட் சர்வீஸ்’ அதிபரின் பயணத் திட்டத்தில் கடைசி நேரத்தில் அதிரடி மாற்றம் செய்தது.
தொலைக்காட்சி கேமராக்கள் முன்பாக டிரம்ப் வழக்கமான ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ரகசியமாக ஒரு கேட்டரிங் லாரியில் ஏற்றி, விமான நிலையத்தின் மற்றொரு பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த சிறிய ரக ஏர் ஃபோர்ஸ் சி-32ஏ (Air Force C-32A) விமானத்திற்கு அவர் மாற்றப்பட்டார்.
அதிபர் மாறிய விஷயம் தெரியாமல், அவருடன் வந்த செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 12 செய்தியாளர்களும், சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் முந்தைய ஏமாற்று விமானத்திலேயே தொடர்ந்து பயணித்தனர். டிரம்ப் பாதுகாப்புடன் மற்றொரு விமானத்தில் அமெரிக்கா வந்து சேர்ந்த பிறகுதான் இந்தத் தந்திரமான நடவடிக்கை குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவத்தின் அறிவுறுத்தலின்படியே நான் விமானத்தை மாற்றினேன், அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நான் அப்படியே பின்பற்றுவேன்” என்று டிரம்ப் விளக்கமளித்துள்ளார். மேலும், தனக்கு இதுபோன்ற பல மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் தான் எப்போதும் கவலைப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
