மூடத்தனத்தின் உச்சம்..! ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான் – கதறும் 24 லட்சம் ஆப்கான் பெண் குழந்தைகள்… ஐநா அதிர்ச்சி அறிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மூடத்தனத்தின் உச்சம்..! ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான் – கதறும் 24 லட்சம் ஆப்கான் பெண் குழந்தைகள்… ஐநா அதிர்ச்சி அறிக்கை..!!

Published

on

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் கீழ் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு உயர்நிலைக் கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகிலேயே பெண்களுக்குக் கல்வியை முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ள நிலையில், 2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்தடையால் ஒட்டுமொத்த பெண் சமூகமும் முடங்கியுள்ளது.

இந்த நிலை நீடித்தால், வரும் 2030-க்குள் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும் என ஐநா எச்சரித்துள்ளது. மேலும், புதிய விதிகளால் கல்வித்துறையில் பெண் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 37 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

Advertisement

சர்வதேச எதிர்ப்புகள் இருந்தும், பெண்களுக்கான கல்வித் தடையை தாலிபான் நிர்வாகம் நியாயப்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் எதிர்காலத் தலைமுறையையும் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in