LATEST NEWS
அப்பா நான் தோத்து போயிட்டேன்…நீங்க ஆசைப்பட்ட அந்த விஷயம் நடக்காமலே போயிடுச்சே… தந்தையின் மறைவு குறித்து மெஸ்ஸி உருக்கம்..!!
கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி (68) உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து, மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் காலமானார்.
தனது தந்தையின் மறைவு குறித்து பதிவிட்டுள்ள மெஸ்ஸி, “கடைசி உலகக் கோப்பையில் நான் விளையாட வேண்டும் என்று நீங்கள் மிகவும் விரும்பினீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் போட்டி தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அவரது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தனது நீண்ட கால கால்பந்து வாழ்க்கையில் ஒரு தொடரின் போது தந்தை அருகில் இல்லாதது இதுவே முதல் முறை என்றும் மெஸ்ஸி வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்தப் பதிவில், “நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம், ஆனால் உங்களால் அங்கு வர முடியவில்லை” என்று மெஸ்ஸி உருகியுள்ளார். ஸ்பெயின் அணிக்கு எதிரான 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, அந்த உலகக் கோப்பையைத் தனது தந்தையிடம் கொண்டு வந்து காட்ட மெஸ்ஸி பெரிதும் விரும்பியுள்ளார். ஆனால், அவரால் அதைச் செய்ய முடியவில்லை என்றும், தனது கால்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகவும், உடலின் எல்லைகளைத் தாண்டிச் செயல்பட முயன்றும் அது முடியாமல் போனதாகவும் மெஸ்ஸி மிகவும் மனவேதனையோடு தெரிவித்துள்ளார்.
