LATEST NEWS
அடேங்கப்பா..! 5 வார்த்தை பேச… ரூ.143 கோடி சம்பளம்.. ஸ்பைடர் மேன் டீசரில் நடித்த மெஸ்ஸியின் விஸ்வரூப சாதனை…!!!
‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் டீசரில் நடித்ததற்காக, உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு ரூ.143 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தை அதிர வைத்துள்ளது. வெறும் 40 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்தத் டீசரில் மெஸ்ஸி வெறும் 5 வார்த்தைகள் மட்டுமே பேசியுள்ளார். இந்த சில வினாடி தோற்றத்திற்காக அவருக்கு இவ்வளவு பிரம்மாண்டத் தொகை வழங்கப்பட்டிருப்பது உலகளவில் சினிமா மற்றும் விளையாட்டு ரசிகர்களைப் பேராச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிக முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம், உலகெங்கும் வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெஸ்ஸியின் இந்தத் திடீர் ஹாலிவுட் பிரவேசம் படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. வெறும் 5 வார்த்தைகளுக்கு ₹143 கோடி பெற முடியும் என்பதை மெஸ்ஸி நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் இந்தச் செய்தியைச் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
