என்னது..! வீட்டில் குளவி கூடு கட்டுவது நல்ல சகுனமா..? தடைபட்ட பண வரவு தேடி வருமா..? பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது..! வீட்டில் குளவி கூடு கட்டுவது நல்ல சகுனமா..? தடைபட்ட பண வரவு தேடி வருமா..? பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?!

Published

on

நமது வீட்டின் ஜன்னல் ஓரங்கள், கதவுகளின் இடுக்கள் மற்றும் சுவர்களில் களிமண்ணால் ஆன நீண்ட குழாய் வடிவ கூடுகளைக் கட்டுவது மண்குளவிகள் ஆகும். இவை வாய்க்கால் மற்றும் தோட்டம் போன்ற ஈரமான இடங்களிலிருந்து களிமண்ணை வாயில் கவ்வி எடுத்துவந்து, தன் எச்சிலைக் கலந்து சுவர்களில் அடுக்கடுக்காக மிக உறுதியாகவும் நேர்த்தியாகவும் ‘இன்ஜினியரிங்’ பாணியில் கூடுகளைக் கட்டுகின்றன.

மண்குளவிகள் காடுகளில் உள்ள பச்சைப் புழுக்களை வேட்டையாடி, அவற்றைக் கொல்லாமல் மயக்கமடையச் செய்யும் விஷத்தைத் தன் கொடுக்குகளால் செலுத்துகின்றன. அந்தப் புழுக்களைத் தான் கட்டிய கூட்டுக்குள் அடைத்து, அதன் மீது முட்டையிட்டு வாசலை மண்ணால் மூடிவிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் குளவிக்குஞ்சு கெட்டுப்போகாமல் இருக்கும் அந்தப் புழுக்களை உணவாக உண்டு வளர்ந்து கூட்டை உடைத்துக்கொண்டு பறக்கிறது. இவை பொதுவாக மனிதர்களைத் தேடிவந்து கொட்டுவதில்லை; நாம் அவற்றைத் துன்புறுத்தினால் மட்டுமே அரிதாகக் கொட்டும். மேலும் தேனீக்கள் அளவுக்குக் கடுமையான விஷம் இல்லாததால் இதனால் மனிதர்களுக்குப் பெரிய ஆபத்து எதுவும் இல்லை.

Advertisement

தமிழ் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் மண்குளவி கூடு கட்டுவது ஒரு நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது. வீட்டின் சுவர்களில் குளவி கூடு கட்டினால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும், தடைபட்ட பண வரவுகள் தேடி வரும் மற்றும் நல்ல காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமன்றி, தோட்டத்து பூச்சிகளை வேட்டையாடுவதன் மூலம் விவசாயத்திற்கும் இவை பெருமளவில் நன்மை செய்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in