CRIME
“ஏன் இந்த அலட்சியம்..?” கல்லூரிக்கு முன்னால் நடந்த விபத்து.. தாடை உடைந்து உயிருக்கு போராடும் வாலிபர்.. போலீஸ் செய்த பகீர் காரியம்.. கதறும் குடும்பத்தினர்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் ஏத்மத்பூர் பகுதியில் உள்ள தேவ் கல்லூரிக்கு முன்பாக கடந்த செப்டம்பர் 7 அன்று நடந்த கொடூரமான சாலை விபத்தில், ஆரிப் என்ற வாலிபர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தின் காரணமாக அவரது தாடை உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, அவர் தீவிர மருத்துவச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்து நடந்து பல நாட்கள் கடந்தபோதிலும், ஏத்மத்பூர் காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்று பாதிக்கப்பட்ட ஆரிப்பின் குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையின் இந்த அலட்சியப் போக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
