நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… கள்ளக்காதலால் குடும்பத்தைப் புறக்கணித்த தந்தை… ஆத்திரத்தில் அரிவாளால் சரமாரியா வெட்டிய மகன்கள்..! நெஞ்சை நடுநடுங்க வைத்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… கள்ளக்காதலால் குடும்பத்தைப் புறக்கணித்த தந்தை… ஆத்திரத்தில் அரிவாளால் சரமாரியா வெட்டிய மகன்கள்..! நெஞ்சை நடுநடுங்க வைத்த பகீர் சம்பவம்..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் செரியால் மண்டல தலைமையகத்தில், கள்ளக்காதல் விவகாரம் மற்றும் குடும்பத்தைப் புறக்கணித்த ஆத்திரத்தில் பெற்ற தந்தையையே பெற்ற மகன்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45 வயதான போடாசு ரவி என்பவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பு இருந்ததாகவும், இதனால் அவர் தனது குடும்பத்தைக் கவனிக்காமல் முற்றிலும் புறக்கணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவரது மகன்கள், நேற்று இரவு தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுத் திடீரென அரிவாளால் அவரைத் தாக்கியுள்ளனர். இதில் ரவியின் கழுத்து மற்றும் கால்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு அவர் இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

Advertisement

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு செரியால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகச் சித்திபேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தாக்குதல் நடத்திய மகன்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in