LATEST NEWS
“இனி லஞ்சம் வாங்குறது ரொம்ப கஷ்டம்..!” அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்.. தமிழக அரசியலை அதிர வைக்கும் அதிரடி அரசாணை..!!
தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணங்களாகச் செல்லும்போது ஏற்படும் செலவுகளைத் தங்களது சொந்தப் பணத்திலிருந்து செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் வசூலித்து வந்த மோசமான நடைமுறைக்குத் தவெக அரசு முழுமையான தடை விதித்துள்ளது. இனிமேல் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் அனைத்து அதிகாரப்பூர்வ ஆய்வுக் செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என அதிரடி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், “நாங்கள் ஆய்வுக்குச் செலவு செய்தோம்” என்ற லஞ்சத்துக்கான நியாயப்படுத்துதல்களுக்கு இனி எள்ளளவும் இடமில்லை.
ஊழலை அதன் வேரிலேயே கிள்ளியெறியும் நோக்கில் முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான நடவடிக்கை அரசியல் களத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இனிமேல் லஞ்சம் வாங்குவோர் மீது எந்தவிதச் சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய நகர்வாக அரசியல் நோக்கர்கள் இந்த உத்தரவைப் பார்க்கின்றனர்.
