“ச்சீ… வயித்துல ரொட்டி சுடுறாங்களா…?!” 2.8 கோடி பேரை ஏமாற்றிய AI வீடியோ… இந்தியாவ பத்தி தப்பா பேசாதீங்க… ஆதரவா பொங்கி எழுந்த அமெரிக்க பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ச்சீ… வயித்துல ரொட்டி சுடுறாங்களா…?!” 2.8 கோடி பேரை ஏமாற்றிய AI வீடியோ… இந்தியாவ பத்தி தப்பா பேசாதீங்க… ஆதரவா பொங்கி எழுந்த அமெரிக்க பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைப் போலவே, தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் ஒரு நாட்டின் பிம்பத்தைச் சீர்குலைப்பதற்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலி வீடியோ ஒன்று காட்டுத்தீ போல பரவியது. அதில் ஒரு நபர் குப்பை மேட்டின் அருகில் நின்றுகொண்டு, தனது பெரிய தொப்பையின் மீது ரொட்டிகளை உருட்டித் தயாரிப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. சுமார் 2.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவை உண்மை என நம்பி, உலகம் முழுவதும் உள்ள பலரும் இந்தியாவைப் பற்றித் தவறான எண்ணத்தைக் கொள்ளத் தொடங்கினர்.

நீண்ட காலமாக இந்தியாவில் வசித்து வரும் கிறிஸ்டன் ஃபிஷர் என்ற அமெரிக்கப் பெண், இந்த வீடியோவைக்கண்டு கடும் கோபமடைந்து இதன் உண்மையைக் வெளிக்கொணரும் வகையில் ஒரு எதிர்வினை வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “உலகம் ஏன் இந்தியாவை மிகவும் அழுக்கடைந்த நாடு என்று நினைக்கிறது தெரியுமா? ஏனென்றால் இணையத்தில் இதுபோன்ற போலியான குப்பைகள் தான் நிரம்பிக் கிடக்கின்றன. யாரும் தங்கள் வயிற்றின் மீது ரொட்டி செய்ய மாட்டார்கள். இது இந்தியாவைச் சீர்குலைப்பதற்காகவே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ. இந்தியா உண்மையில் அப்படிப்பட்ட நாடு அல்ல; அது மிகச்சிறந்த மனிதர்கள் வாழும் அழகான இடம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcyUmu_zkC5/?utm_source=ig_web_button_share_sheet

உண்மையை உரக்கச் சொன்ன கிறிஸ்டன் ஃபிஷரின் இந்த வீடியோவுக்குச் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவும் பாராட்டும் குவிந்து வருகின்றன. ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவிற்கு ஆதரவாக உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததைப் பல இந்தியர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, அதன் அழகையும் தூய்மையையும் மறைக்க முயலும் போலி வீடியோ தயாரிப்பாளர்களின் அற்பத்தனமான மனநிலையைத் தோலுரித்துக் காட்டுவது மிகவும் அவசியம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in