“எதையும் ஷேர் பண்ண மாட்டோம்..!” ஒரே பிளாட்… ஆனா மூணு கிச்சன்… ரூம்மேட்ஸ் சண்டையைத் தவிர்க்க சரியான வழி இதுதான்..! சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் 3 பெண்களின் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எதையும் ஷேர் பண்ண மாட்டோம்..!” ஒரே பிளாட்… ஆனா மூணு கிச்சன்… ரூம்மேட்ஸ் சண்டையைத் தவிர்க்க சரியான வழி இதுதான்..! சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் 3 பெண்களின் வைரல் வீடியோ..!!

Published

on

ஒரு ஒரே பிளாட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் மூன்று பெண்கள், தங்களுக்குள் எந்தப் பொருட்களையும் பகிர்ந்து கொள்ளாமல் சமையலறையை தனித்தனியாகப் பயன்படுத்தும் விசித்திரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் @SamSiff என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்ந்துள்ளனர். சமையலறையை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரிந்தாலும், உற்று கவனிக்கும் போதுதான் அவர்களின் இந்த விசித்திரமான ஏற்பாடு வெளிச்சத்திற்கு வருகிறது.

அந்தச் சமையலறையில் மூன்று தனித்தனி எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அவற்றிற்கான மூன்று தனித்தனி அடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதாவது சமைப்பதற்காக ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனி செட்டப் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாத்திரங்கள், தட்டுகள், கரண்டிகள் மற்றும் பாத்திரம் கழுவும் சோப், ஸ்பாஞ்ச் ஆகியவை கூட தனித்தனி கூடைகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரே பிளாட்டில் வசித்தாலும், ஒரே இடத்தில் மூன்று தனித்தனி வீடுகளின் சமையலறையை அமைத்தது போல இந்த ஏற்பாடு உள்ளது.

Advertisement

பொதுவாக நண்பர்களோ அல்லது ரூம்மேட்களோ ஒன்றாகத் தங்கும்போது மளிகைப் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் சமையலறைப் பொருட்களைப் பகிர்ந்து கொள்வது இயல்பு. ஆனால், இந்த வீடியோவில் உள்ள பெண்கள் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் தங்களுக்குள் சண்டைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் வருவதைத் தவிர்க்கவே இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது ரூம்மேட்களுக்கு இடையே தேவையில்லாத தகராறுகளைத் தவிர்க்கும் நல்ல யோசனை” என்றும், “பகிர்ந்து கொள்ளும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது” என்றும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in