“நீ நாளைக்கே செத்துட்டா என் நிலைமை என்ன ஆவது.?” புற்றுநோய் வந்த கணவரை விட்டு ஓடிப்போய் 2-வது கல்யாணம் செய்த மனைவி… சோஷியல் மீடியாவை கொந்தளிக்க வைத்த இன்ஸ்டா பெண்ணின் வக்ர புத்தி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீ நாளைக்கே செத்துட்டா என் நிலைமை என்ன ஆவது.?” புற்றுநோய் வந்த கணவரை விட்டு ஓடிப்போய் 2-வது கல்யாணம் செய்த மனைவி… சோஷியல் மீடியாவை கொந்தளிக்க வைத்த இன்ஸ்டா பெண்ணின் வக்ர புத்தி…!!

Published

on

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணொருவர், திருமணமான சில மாதங்களிலேயே தனது கணவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதும் அவரை மனிதநேயமின்றி கைவிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், அவருக்கு ஆறுதலாக இருப்பதற்குப் பதிலாக, “நீ நாளைக்கே செத்துட்டா என் நிலைமை என்ன ஆவது?” என்று இதயமே இல்லாமல் கேட்டுவிட்டு அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

அத்துடன் நிற்காமல், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவரிடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து கூட பெறாமல், அந்தப் பெண் சட்டவிரோதமாக வேறொரு நபரை இரண்டாவதுத் திருமணமும் செய்துகொண்டார். கணவரைத் தவிக்கவிட்டுச் சென்ற அந்தப் பெண்ணின் கொடூரமான செயலையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் தற்போது பிடிவாரண்ட் பிறப்பித்து கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

ஒருவேளை இதேபோல புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை கைவிட்டு, ஒரு ஆண் இரகசியமாக வேறு திருமணம் செய்திருந்தால் இந்நேரம் இந்தச் சமூகம் எந்த அளவிற்கு அந்த ஆணைக் கொந்தளித்து எதிர்த்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சுயநலத்தின் உச்சமாகச் செயல்பட்ட அந்தப் பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களைப் பெற்று வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in