இன்ஸ்டாகிராமில் ஸ்கெட்ச்.. ரயில்வே பிளாட்பாரத்தில் கத்தி தீட்டிய கும்பல்.. ‘ரூட் தல’ மோதலில் கல்லூரி மாணவர்களைப் படுகொலை செய்யத் திட்டம்… சென்னையில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்ஸ்டாகிராமில் ஸ்கெட்ச்.. ரயில்வே பிளாட்பாரத்தில் கத்தி தீட்டிய கும்பல்.. ‘ரூட் தல’ மோதலில் கல்லூரி மாணவர்களைப் படுகொலை செய்யத் திட்டம்… சென்னையில் அதிர்ச்சி..!!

Published

on

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் பேருந்து மற்றும் ரயில் வழித்தட ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் ‘ரூட் தல’ மோதலில், மாற்றுப் பள்ளி மாணவர்களைக் கொடூரமாகக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த 17 ஐடிஐ (ITI) மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நேற்று மாலை (செப்டம்பர் 29) அம்பத்தூர் ரயில் நிலைய நடைமேடையில் பயங்கரமான பட்டாக் கத்திகளைப் பகிரங்கமாகத் தீட்டிக் கொண்டிருந்த மாணவர்களைக் கண்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்கள் அளித்த ரகசியத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீஸார், அச்சுறுத்தலாக நின்றிருந்த மாணவர்களை நாலாபுறமும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இந்த அதிரடி வேட்டையில் 17 மாணவர்கள் பிடிபட்ட நிலையில், போலீஸாரைக் கண்டதும் 3 பேர் தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்கள் அனைவரும் அம்பத்தூர், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஐடிஐ தொழிற்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்களுக்கும் சென்னை தங்கசாலையில் உள்ள ஐடிஐ மாணவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக ‘ரூட் தல’ முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அன்று மாலை 5 மணியளவில் தங்கசாலை மாணவர்கள் திருவள்ளூர் செல்லும் ரயிலில் அவ்வழியாக வரும்போது, அவர்களைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்ய இக்கும்பல் திட்டமிட்டிருந்தது அம்பலமானது. அதிர்ஷ்டவசமாகப் பொதுமக்களின் துரிதமான எச்சரிக்கையால் ரயில் நிலையத்தில் அரங்கேறவிருந்த ஒரு பயங்கரக் குருதிப் போர் மற்றும் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 17 பேரில் 14 பேர் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் அவர்கள் கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், எஞ்சிய 3 மாணவர்கள் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்கள் கொலைத் திட்டத்திற்காக இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக வலைத்தளத்தில் ரகசியக் குழு அமைத்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறி ஒன்று கூடியதும் அம்பலமாகியுள்ளது. இவர்களிடமிருந்து 3 நீளமான பட்டாக் கத்திகளைப் பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய மற்ற 3 மாணவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in