LATEST NEWS
“உன்னை நீயே நம்பு!” ஒரே ஒரு வீடியோவை காட்டி 8.5 கோடியை அள்ளிய மர்ம நபர்… ரூ.500-க்கு ஆசைப்பட்டு 1.66 லட்சம் பேருக்கு ஆப்பு… இன்ஸ்டா உலகையே உலுக்கிய ‘Big Reveal’ மோசடியின் பகீர் பின்னணி..!!
இன்ஸ்டாகிராமில் ‘Big Reveal’ என்ற பெயரில் தனது ஃபாலோயர்களுக்குப் பெரிய ரகசியம் ஒன்றை வெளியிடப்போவதாகக் கூறி, மர்ம நபர் ஒருவர் சுமார் 8.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்ஸ்டா மூலம் இந்த நூதன ஆன்லைன் மோசடி வலை விரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அதில் சிக்கித் தவிப்பது தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மர்ம நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ஃபாலோயர்களிடம், ஆகஸ்ட் 25 அன்று மிகப்பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தப் போவதாக ஆசைகாட்டியுள்ளார். அந்த ‘Big Reveal’-ஐக் காண விரும்பினால் டெலிகிராம் குரூப் ஒன்றில் 500 ரூபாய் செலுத்தி இணைய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சுமார் 1.66 லட்சம் ஃபாலோயர்கள், தலா 500 ரூபாயை ஆன்லைனில் செலுத்தி அந்த டெலிகிராம் பக்கத்தில் இணைந்துள்ளனர்.
இப்படியாக ஒட்டுமொத்தமாக சுமார் 8.5 கோடி ரூபாய் வரை பணம் வசூலான பிறகு, அந்த மர்ம நபர் சொன்னபடி ஒரு பெரிய ரகசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோவில் ‘நேரத்தை மதிப்புள்ளதாக்கப் பயன்படுத்து’, ‘உன்னை நீயே நம்பு’ போன்ற சாதாரண மோட்டிவேஷனல் வரிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த பின்பே தாங்கள் மோசடி வலையில் சிக்கி ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஃபாலோயர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
