LATEST NEWS
“1 நிமிடம் நெஞ்சம் நின்றுபோச்சு..!” புதிய வீடு பார்க்கச் சென்ற தம்பதியினர் மீது பாய்ந்த பிட்புல் நாய்… ரத்த வெள்ளத்தில் மிதந்த கோரம்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
பட்டியாலாவில் புதிய வீடு ஒன்றைப் பார்ப்பதற்காகச் சொத்து முகவருடன் சென்ற தம்பதியினர் மீது, வீட்டின் உரிமையாளரின் வளர்ப்புப் பிட்புல்நாய் திடீரெனப் பாய்ந்து தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதவு திறக்கப்பட்டவுடன் ஆக்ரோஷமாக வெளியேறிய அந்தப் பிட்புல் நாய் பெண்ணை கீழே தள்ளித் தாக்கியதுடன், காப்பாற்ற முயன்ற கணவரையும் சேர்த்து உடல் முழுவதும் கொடூரமாகக் கடித்துக் குதறியதால் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இந்தத் திடுக்கிடும் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
“रोंगटे खड़े हो गए खूंखार पिटबुल का ये वीडियो देखकर.. बेचारे दंपति मकान देखने गए थे.. पिटबुल ने काट-काट के खून से लथपथ कर दिया..”
वीडियो पटियाला का है जहां एक दंपति प्रॉपर्टी डीलर के साथ मकान देखने गए थे.. मकान उन्हें खरीदना था. प्रॉपर्टी डीलर जैसे ही दरवाजा खोलकर भीतर गया,… pic.twitter.com/IuQ3a2ztGX— Vivek K. Tripathi (@meevkt) August 12, 2026
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தடிகளையும் கம்புகளையும் கொண்டு நீண்ட போராட்டம் நடத்திய பின்னரே அந்த நாய் ஓட்டம் பிடித்த நிலையில், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தம்பதியினர் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். லக்னோவில் பிட்புல் நாய் ஒன்று தன் சொந்த மூதாட்டி உரிமையாளரையே கொன்ற சம்பவங்களைப் போல ஆபத்தான நாய்களின் தாக்குதல்கள் தொடர்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
