LATEST NEWS
திடீர் திருப்பம்..! “அவருக்கு பல பெண்களோடு தொடர்பு… தினமும் சித்ரவதை” தயவுசெஞ்சு எங்களை பிரிக்காதீங்க… கண்டக்டருடன் ஓடிய யூடியூபர் மனைவி வெளியிட்ட பகீர் வீடியோ.. பெரும் பரபரப்பு..!!
யூடியூபரின் மனைவி நடத்துனருடன் ஓடிப்போன வழக்கில் தற்போது ஒரு புதிய அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவரைப் பிரிந்து சென்ற மேகா என்ற அந்தப் பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது கணவர் அகில் தன்மீது சரியான அக்கறை காட்டுவதில்லை என்றும், அவரைப் பற்றிப் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். தனது கணவருக்கு வேறு பல இளம் பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தினமும் தன்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாலேயே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், தான் மனதார நேசிக்கும் நபர் கண்டக்டராக இருந்தாலும் சரி அல்லது கிளீனராக இருந்தாலும் சரி, அவருடன் மட்டுமே வாழப்போவதாக மேகா மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். “அவர் இல்லை என்றால் என்னால் வாழ முடியாது” எனக் கூறிய அவர், தயவுசெய்து தங்களை ஒருவரிடமிருந்து ஒருவரைப் பிரித்துவிட வேண்டாம் என்றும், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கணவர் அகிலின் கொடுமைகளில் இருந்து தப்பிக்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த வழக்குக்கு மேலும் பரபரப்பூட்டும் விதமாக, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அந்த வீடியோவை மேகா திடீரென நீக்கியுள்ளார் . வீடியோவை நீக்கியதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், அவர் யாரேனும் அச்சுறுத்தலின் பேரில் வீடியோவை நீக்கினாரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
