“மிஸ் பண்ணிடாதீங்க..! 133 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு..!” வானில் பொழியப்போகும் விண்கல் மழை..! இன்று இரவைக் தவறவிட்டால் அப்புறம் பார்க்கவே முடியாது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மிஸ் பண்ணிடாதீங்க..! 133 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு..!” வானில் பொழியப்போகும் விண்கல் மழை..! இன்று இரவைக் தவறவிட்டால் அப்புறம் பார்க்கவே முடியாது..!!

Published

on

வானியல் ஆர்வலர்களுக்கும் இயற்கை விரும்பிகளுக்கும் ஒரு மிகச் சிறந்த விண்வெளி விருந்தாக, சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய மிக அரிய விண்கல் மழை இன்று நள்ளிரவு வானில் அரங்கேறவுள்ளது. இந்த அபூர்வ நிகழ்வைத் தவறவிட்டுவிடாதீர்கள் என வானியல் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான இடைப்பட்ட காலத்தில், மணி நேரத்திற்குச் சுமார் 50 முதல் 100 விண்கற்கள் வரை பூமியை நோக்கிச் சீறிப் பாய்ந்து பொழியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கற்கள் வளிமண்டல உராய்வு காரணமாக விண்வெளியில் எரிந்து பிரகாசமான ஒளிக்கீற்றுகளாகத் தோன்றும் காட்சி, காண்போரைக் பரவசத்தில் ஆழ்த்தும்.

Advertisement

குறிப்பாக, எந்தவிதமான சிறப்புத் தொலைநோக்கிகளும் இன்றி, வெறும் கண்ணாலேயே பார்த்து ரசிக்கும் வகையில் இந்த விண்கல் பொழிவு அமையவுள்ளது சிறப்பம்சமாகும். நகரத்தின் செயற்கை வெளிச்சங்கள் இல்லாத, இருட்டான திறந்தவெளிப் பகுதிகளில் இருந்து பார்த்தால் இந்தக் காட்சியைக் மிகத் தெளிவாகக் காண முடியும். 133 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழும் இந்த அரிய இயற்கை அதிசயத்தைக் காண்பதற்கு உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எனவே, இன்று நள்ளிரவு 2 மணி முதல் 4 மணி வரை வானத்தை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்புங்கள்; இந்த அரிய தருணத்தை தவறவிட்டுவிடாதீர்கள்!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in