சர்வதேச போட்டிக்குச் செல்ல ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்ட கொடூரம்… முதல்-மந்திரி கண்முன்னே போட்டுடைத்த மாணவி.. தேசிய அளவில் வெடித்த சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சர்வதேச போட்டிக்குச் செல்ல ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்ட கொடூரம்… முதல்-மந்திரி கண்முன்னே போட்டுடைத்த மாணவி.. தேசிய அளவில் வெடித்த சர்ச்சை..!!

Published

on

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தேசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று ரோமேனியாவில் நடந்த சர்வதேச போட்டிக்குத் தேர்வாகியும், 1.5 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய முடியாததால் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று 17 வயது மாணவி சாய்ரா, முதல்வர் புஷ்கர் சிங் தமி முன்னிலையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமியின் இந்த பேச்சைக் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. ஆட்சியில் லஞ்சம் கொடுக்க முடியாததால்தான் சிறுமிக்குக் கிடைத்த வாய்ப்பு நழுவியதாகக் குற்றஞ்சாட்டியதுடன், இதுதொடர்பான வீடியோக்கள் அரசு சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டதும் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

இந்தச் சூழலில் வெளியான அந்த மாணவியின் முழு வீடியோவில், நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனம் 1.7 லட்சம் ரூபாய் செலவை ஏற்க முன்வந்ததாகவும், மீதமுள்ள 1.5 லட்சத்தை மட்டுமே தான் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது என்றும், இந்த வாய்ப்பை யாரிடமும் கூறாததால் பணம் திரட்ட முடியவில்லையே தவிர, யாரும் லஞ்சம் கேட்டதாகவோ அரசு அதிகாரிகள் பணம் கேட்டதாகவோ அவர் எங்குமே கூறவில்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், உண்மைத் தகவல் வெளிவந்து சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in