யார் அந்த புள்ளி..? இடைத்தேர்தல் முடிஞ்சதும் தவெக அமைச்சரவையில் அதிரடி நீக்கம்..? 3 அமைச்சர்கள் பதவி காலி.. தூக்கியடிக்கும் முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யார் அந்த புள்ளி..? இடைத்தேர்தல் முடிஞ்சதும் தவெக அமைச்சரவையில் அதிரடி நீக்கம்..? 3 அமைச்சர்கள் பதவி காலி.. தூக்கியடிக்கும் முதல்வர் விஜய்..!!

Published

on

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நிறைவடைந்ததும், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்ச்சைகளில் சிக்கிய சில அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துவிட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்தத் தகவல் தவெகவின் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்துறை, காவல்துறை, IAS, IPS, மற்றும் IFS போன்ற முதன்மைத் துறைகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட முக்கிய இலாகாக்களை முதல்வர் விஜய் தனவசம் வைத்துள்ளார். இதில், அவர் வசமிருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை போன்ற சில முக்கியத் துறைகளை மற்ற அமைச்சர்களுக்கும், புதிதாக அமைச்சரவையில் இணைய உள்ளவர்களுக்கும் பிரித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடமிருக்கும் துறையை மாற்றியமைத்து, அவருக்கு நகராட்சி நிர்வாகத் துறையை ஒதுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்படுபவர்கள், ‘மக்கள் மன்றம்’ தொடங்கிய காலத்திலிருந்தே தவெகவுடன் உறுதியாகப் பயணித்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக உள்ளார். அதேவேளையில், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த சர்ச்சை அமைச்சர் ஒருவர் மீது எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போராட்டம் நடத்தியபோது, ‘திமுகவின் மிரட்டலுக்குப் பணிந்தது போல் ஆகிவிடும்’ என்பதால் அப்போது அமைதி காத்த விஜய், வரவிருக்கும் மாற்றத்தின்போது அவரது பதவியைப் பறிக்கவுள்ளார். இவருடன் சேர்த்து ஒரு பெண் அமைச்சர் உட்பட மொத்தம் மூன்று அமைச்சர்களின் பதவிகள் பறிபோக வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவி நீக்கம் செய்யப்படவுள்ள இடங்களுக்குப் பதிலாக, விஜய் ரசிகர் மன்றக் காலத்திலிருந்து தடம் மாறாமல் உழைத்துவரும் மதுரையைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குப் புதிய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த தற்போதைய அமைச்சர்கள் சிலர், தங்களது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்த ஓடிக்கொண்டிருக்கின்றனர். மற்றொருபுறம், புதிய நபர்கள் அமைச்சரவைக்குள் நுழைவதைத் தடுக்க ஒரு தரப்பினர் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றனர்.

Advertisement

இருப்பினும், உளவுத்துறை சேகரித்துத் தந்த துல்லியமான தகவல்களின் அடிப்படையில் புதிய அமைச்சரவைப் பட்டியலை விஜய் ஏற்கனவே தயார் செய்துவிட்டதால், அவரது முடிவே இறுதியானதாக இருக்கும். ஆட்சி அமைந்த புதிதில் அனைவருக்கும் வாய்ப்பளித்துப் பார்ப்போம் என்ற அணுகுமுறையை மாற்றி, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பல வருடங்களாகத் தன்னுடன் பயணிக்கும் உண்மைத் தொண்டர்களை உயர்த்தவும் இந்த இடைத்தேர்தலுக்குப் பின் தவெகவில் பல அதிரடிகள் அரங்கேறவுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in