LATEST NEWS
BREAKING: புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’… சென்னையில் ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம்..! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றைப் வெளியிட்டார். அதன்படி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது தலைமைச் செயலகம் இரு வேறு கட்டடங்களாகச் செயல்பட்டு வருவதால், நிர்வாகப் பணிகளை மேலும் விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்தித் தரவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்காகச் சென்னையில் அனைத்து நவீன உயர்தர வசதிகளுடன் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட உள்ளது. தலைமைச் செயலகம் புதிய இடத்திற்கு மாற்றப்படக்கூடும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது அதனை உறுதி செய்துள்ளது.
