LATEST NEWS
CM விஜய்க்கு ரெடியாகும் மாஸ் ஆபீஸ்…! நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெறும் அந்த பிரத்யேக வசதிகள் என்னென்ன..?!
தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளை அதிநவீன முறையில் மேற்கொள்வதற்காக ரூ.5 கோடி மதிப்பில் இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அமைக்கப்படவுள்ள முதலமைச்சரின் அறையில் பல்வேறு பிரத்யேக மற்றும் நவீன வசதிகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதுப்பித்தல் மற்றும் மாற்றப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், முதலமைச்சர் விஜய் தனது அன்றாட அரசுப் பணிகளை நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்தே நேரடியாக மேற்கொள்வார்.
