“CM சார், கார் எல்லாருக்கும் தருவீங்களா..? இல்ல…” பாமக MLA கேட்ட மழலைத்தனமான கேள்வி.. விழுந்து விழுந்து சிரித்த சௌமியா அன்புமணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“CM சார், கார் எல்லாருக்கும் தருவீங்களா..? இல்ல…” பாமக MLA கேட்ட மழலைத்தனமான கேள்வி.. விழுந்து விழுந்து சிரித்த சௌமியா அன்புமணி..!!

Published

on

தமிழகச் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளைச் சுமுகமாக மேற்கொள்வதற்காக அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் புதிய கார்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ம.க சட்டமன்ற உறுப்பினர், “முதலமைச்சர் சார், இந்தக் கார் திட்டம் அனைவருக்கும் தருவீங்களா? அல்லது முதல்முறை எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும்தானா?” என்று ஆர்வம் தாங்காமல் கேள்வி எழுப்பினார்.

எம்.எல்.ஏ-வின் இந்தக் கேள்வியைக் கேட்டதும், சட்டப்பேரவையின் பார்வையாளர் மாடத்திலிருந்து நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்த பா.ம.க தலைவர் சௌமியா அன்புமணி, தன் சிரிப்பை அடக்க முடியாமல் மேஜை மீது தலைசாய்த்துச் சிரித்தார். அதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், கார் வசதி என்பது முதல்முறை தேர்வானவர்கள் மட்டுமன்றி, சட்டப்பேரவையில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் பொருந்தும் என்று புன்னகையுடன் தெளிவுபடுத்தினார்.

Advertisement

முதலமைச்சரின் இந்த அறிவிப்பும், பா.ம.க உறுப்பினரின் கேள்வியும், சௌமியா அன்புமணியின் அந்த இயல்பான சிரிப்பும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in