LATEST NEWS
“டிரம்பே உன் ஆட்டம் க்ளோஸ் சாமி..” அமெரிக்க தேர்தலில் 20 லட்சம் இந்தியர்கள் எடுத்த அதிரடி முடிவு… கருத்துக்கணிப்பில் வெளியான ஷாக்கிங் தகவல்..!!
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் இடைக்கால தேர்தலுக்கு முன்னதாக, ஆசிய-அமெரிக்க சமூகங்களிடையே நடத்தப்பட்ட ஏஏபிஐ டேட்டா கருத்துக்கணிப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு இந்திய-அமெரிக்கர்களிடையே இருந்த செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் பதிலளித்த இந்திய-அமெரிக்கர்களில் 66% பேர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், வெறும் 22% பேர் மட்டுமே குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 அதிபர் தேர்தலின் போது இந்திய-அமெரிக்கர்களிடையே, குறிப்பாக ஆண்களிடையே டிரம்ப் பெற்றிருந்த 40% வரை உயர்ந்த ஆதரவு நிலை தற்போது பாதியாகக் குறைந்துள்ளது. ஏறத்தாழ 20 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தச் சமூகம் மீண்டும் தங்களின் பாரம்பரிய ஆதரவுத் தளமான ஜனநாயகக் கட்சியின் பக்கமே சாய்வது இந்தத் தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது. வளரும் அரசியல் செல்வாக்கு கொண்ட இந்த சமூகத்தின் ஆதரவை இழப்பது குடியரசுக் கட்சியினருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் போன்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவாதம் மற்றும் சகிப்புத்தன்மையற்ற சூழலே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குடியரசுக் கட்சி சிறுபான்மையினரிடம் காட்டும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையே தங்களின் எதிர்ப்பிற்கு முக்கியக் காரணம் என 27% இந்திய-அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஈரானுடனான மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் வேளையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் போர்ச் சூழல் தொடர்பான முதன்மைப் பிரச்சனைகளிலும் அவர்கள் ஜனநாயகக் கட்சியையே அதிகம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
