LATEST NEWS
“பணிபுரியும் பெண்களுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸ்..!” மாதவிடாய் கால விடுமுறை… உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!
தமிழகத்தில் வேலைபார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கக் கோரி, மதுரை கோமதிபுரத்தை வைச் சேர்ந்த நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அரசு மற்றும் தனியார் துறைப் பெண் ஊழியர்கள் இக்காலத்தில் கடும் வலியையும் மன உளைச்சலையும் அனுபவித்து வருவதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ‘மாதவிடாய்’ என்பது ஒரு இயற்கையான உயிரியல் செயல்முறை என்பதால், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், இதுகுறித்த அரசின் கொள்கையை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் இதுதொடர்பான விதிகளை உருவாக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அக்குழுவின் உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். ஏற்கனவே பீகார், ஒடிசா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
