“எம்.எல்.ஏ-க்களுக்கு காரா..? அப்போ எங்களுக்கு பைக்காவது கொடுங்க..!” தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் கோரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எம்.எல்.ஏ-க்களுக்கு காரா..? அப்போ எங்களுக்கு பைக்காவது கொடுங்க..!” தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் கோரிக்கை..!!

Published

on

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ள சூழலில், தங்களுக்குக் குறைந்தபட்சம் ‘பைக்’ இவழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

முன்னதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்குவதைப் போலவே கிராமப்புறங்களில் தீவிரமாகப் பணியாற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் கார் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியிருந்தார். கள அளவில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கையாளும் தங்களுக்கு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களைச் சந்திக்கச் செல்ல ஏதுவாக வாகன வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் தற்போது வலுத்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in