LATEST NEWS
அடிக்கு அடி… “அமெரிக்க மாகாணமே இனி எங்களுடையது..!” டிரம்புக்கு ஈரான் கொடுத்த மரண மாஸ் பதிலடி.. உலக அரங்கில் பரபரப்பு..!!
மத்திய கிழக்கு பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பாதையைக் கைப்பற்றியது போன்ற ஒரு வரைபடத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளதாகவும், அந்தப் படத்தை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கமும் பகிர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் ஏற்கனவே நிலவி வரும் அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றமான சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அரசு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை ஈரானின் புதிய பிராந்திய பகுதி என்று குறிப்பிட்டு ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த வரைபடத்தில், கலிபோர்னியா நீல நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவிலான ஈரானியர்கள் வாழும் இடமாக கலிபோர்னியா திகழ்வதுடன், குறிப்பாக லாஸ் ஏஞ்சலஸ் நகரின் வெஸ்ட்வுட் பகுதி “தெஹ்ரான்கலெஸ்” என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
