LATEST NEWS
CM விஜய்யின் அந்த அழகு முகத்தை பார்த்து ரசிக்க தனியா Screen வையுங்கப்பா.. பேரவையில் பரபரப்பு கிளப்பிய தவெக MLA வினோதக் கோரிக்கை..!!
தமிழக சட்டமன்றப் பேரவையில், முதலமைச்சர் விஜய்யின் முகத்தை முழுமையாகக் கண்டு ரசிக்க ஏதுவாகத் தனித் திரை அமைக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை, அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரவையில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் அதனை நகைச்சுவையோடு எதிர்கொண்டு, குலுங்கி குலுங்கிச் சிரிக்கும் முதலமைச்சரின் அழகிய முகத்தை எங்களால் முழுமையாகக் காண முடிவதில்லை என்றும், மாலையில் தொலைக்காட்சியில் பார்த்துதான் அதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்றும் குறிப்பிட்டு இக்கோரிக்கையை முன்வைத்தார்.
முதலமைச்சரைப் புகழ்ந்து தவெக எம்.எல்.ஏ பேசிய இந்த ஜால்ரா பேச்சு மற்றும் தனித் திரை கோரிக்கை, சட்டமன்ற மரபுகளுக்கு முரணாக இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் மாற்று அரசியல் தரப்பிலும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. சட்டமன்றத்தை விவாதக் களமாகப் பயன்படுத்தாமல், முதலமைச்சருக்கான பாராட்டு மன்றமாக மாற்ற முயல்வதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
