“அந்த நபர் ஃபோன் பண்ணாலே பயமா இருக்கு” முன்னாடிலாம் என்ன சாப்டியான்னு கேப்பாரு… ஆனா இப்போ என் 58 லட்சம் பாக்கிய எப்போ தருவேனு கேக்குறாரு..? பேரவையில் உண்மையை உடைத்த அமைச்சர் ரமேஷ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த நபர் ஃபோன் பண்ணாலே பயமா இருக்கு” முன்னாடிலாம் என்ன சாப்டியான்னு கேப்பாரு… ஆனா இப்போ என் 58 லட்சம் பாக்கிய எப்போ தருவேனு கேக்குறாரு..? பேரவையில் உண்மையை உடைத்த அமைச்சர் ரமேஷ்..!!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோயில் குடமுழுக்கு மற்றும் திருப்பணிகள் குறித்த விவாதத்தின்போது, தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு இடையே கலகலப்பான அதேசமயம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காததால் அவை நிலுவையில் உள்ளதாக அமைச்சர் ரமேஷ் அவையில் குற்றம்சாட்டினார்.

இந்த விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ரமேஷ், “முன்பெல்லாம் எனது நண்பரும், தற்போதைய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான லயோலா மணி எனக்கு போன் செய்தால் ‘சாப்பிட்டியா, என்ன பண்ற?’ என்றுதான் அன்பாகக் கேட்பார். ஆனால், இப்போதெல்லாம் போன் போட்டால், ‘உன் துறையிலிருந்து எங்களுக்கு ரூ. 58 லட்சம் பாக்கி வர வேண்டியிருக்கிறது, அதை எப்போது கொடுப்பாய்?’ என்று கேட்கிறார்” எனக் குறிப்பிட்டுப் பேசினார். அறநிலையத்துறை பல இடங்களுக்குத் திருப்பித் தர வேண்டிய நிலுவைத்தொகை அதிகமாக இருப்பதை விளக்க அவர் இவ்வாறு நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

Advertisement

இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கடந்த திமுக ஆட்சியில் சுமார் 4,930 கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்களை அடுக்கினார். தற்போதைய அரசு வெறும் 3,000 கோயில்களுக்கு மட்டுமே இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இறைவனுக்கே சோதனை தரும் வகையில் தற்போதைய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் நிதி மேலாண்மை இருப்பதாகக் விமர்சித்துப் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in