“ஈரான் விவகாரத்தில் டிரம்ப் நாடகம் ஆடுகிறார்” அவர் சொல்வது பொய்.. ஏன் தெரியுமா.? ஈரான் பரபரப்பு குற்றசாட்டு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஈரான் விவகாரத்தில் டிரம்ப் நாடகம் ஆடுகிறார்” அவர் சொல்வது பொய்.. ஏன் தெரியுமா.? ஈரான் பரபரப்பு குற்றசாட்டு..!!!

Published

on

ஈரான் மீது மிகப்பெரிய அளவில் ராணுவத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று அத்தாக்குதலை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும், தாக்குதலை நிறுத்துமாறு ஈரான் கோரிக்கை விடுத்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அமெரிக்க அதிபரின் இந்தக் கூற்றை ஈரானிய ஊடகங்கள் முற்றிலும் மறுத்துள்ளன. டிரம்ப் திட்டமிட்டே பொய்களைப் பரப்பி வருவதாகவும், தாக்குதல் நடத்த அஞ்சி அவர் பின்வாங்கியதாகவும் ஈரானிய ஊடகங்கள் கடுமையாகச் சாடியுள்ளன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எந்தவொரு கோரிக்கையையும் ஈரான் வைக்கவில்லை என்றும் அவை தெளிவுபடுத்தியுள்ளன.

Advertisement

அமெரிக்காவில் விரைவில் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலை மனதில் வைத்தே டிரம்ப் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றி வருவதாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. தேர்தல் ஆதாயத்திற்காகவே தாக்குதல் திட்டத்தை அறிவிப்பதும், பின்னர் அதை ரத்து செய்வதாகக் கூறுவதும் டிரம்பின் அரசியல் உத்தி என்று ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in