செந்தில் பாலாஜிக்கு தைரியம் இருந்தால்… ஓடி ஒழியாம நேருக்கு நேர் வந்து இதை செய்ய முடியுமா..? அமைச்சர் ரமேஷ் பரபரப்பு சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செந்தில் பாலாஜிக்கு தைரியம் இருந்தால்… ஓடி ஒழியாம நேருக்கு நேர் வந்து இதை செய்ய முடியுமா..? அமைச்சர் ரமேஷ் பரபரப்பு சவால்..!!

Published

on

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டுப் பேசினால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் ஏதேனும் இடங்களைப் பெற முடியும் எனத் தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் நடந்த ஊழல்கள், கோயில் சொத்து ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரிக்கத் தனிக்குழு அமைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

செந்தில் பாலாஜி தைரியம் இருந்தால் நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றி தினமும் காவல்நிலையத்தில் ஆஜராகி வழக்கைச் சந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், திமுக ஆட்சி குறித்த ஊழல்கள் பற்றி விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். செந்தில் பாலாஜிக்கு தைரியம் இருந்தால் ஓடி ஒளியாமல் களத்தில் வந்து வழக்குகளைச் சந்திக்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். தவறு செய்யவில்லை என்றால் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி, நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டியதுதானே எனக் கேள்வி எழுப்பிய அவர், ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in