எவ்வளவு தைரியம்,.? ராமர் பணத்தை ஆட்டைய போட்டு காதலிக்கு ஐஃபோன்… 1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ.20.39 லட்சம் பணம்… வசமாக சிக்கிய முக்கியக் குற்றவாளி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எவ்வளவு தைரியம்,.? ராமர் பணத்தை ஆட்டைய போட்டு காதலிக்கு ஐஃபோன்… 1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ.20.39 லட்சம் பணம்… வசமாக சிக்கிய முக்கியக் குற்றவாளி..!!

Published

on

அயோத்தி ராமர் கோயிலின் காணிக்கைப் பணத்தைச் சுருட்டி, தனது காதலிக்கு ஐஃபோன் வாங்கிக் கொடுத்த முக்கியக் குற்றவாளியான அவினாஷ் சுக்லா என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் காணிக்கைப் பணத்தைத் திட்டமிட்டுத் திருடி வந்த கும்பலின் பின்னணி இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளி அவினாஷ் சுக்லா, ராமர் கோயில் காணிக்கைப் பணத்திலிருந்து தனது குடும்பத்திற்கு ரூ.19 லட்சமும், தனது அண்ணனின் திருமணத்திற்காக ரூ.6 லட்சமும் கொடுத்து உதவியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், திருடப்பட்டப் பணத்தைக் கொண்டு தனது குடும்பத்தினர் பெயரில் பல்வேறு அசையா சொத்துக்களை வாங்கி அவர் குவித்து வைத்துள்ளார்.

Advertisement

குற்றவாளியிடமிருந்து ரூ.20.39 லட்சம் ரொக்கப் பணத்தைக் காவல்துறை தற்போது அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. புனிதமான கோயில் காணிக்கைப் பணத்தை காதலிக்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கவும், குடும்பச் சொத்துக்களைச் சேர்க்கவும் பயன்படுத்திய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in