LATEST NEWS
“என் குழந்தையை விட்ருடா..!” நடுரோட்டில் மர்ம நபரிடம் தாய் நடத்திய மரண போராட்டம்.. இறுதியில் நேர்ந்த விபரிந்தம்… இணையத்தை அலற வைக்கும் வீடியோ..!!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், காவல் நிலையத்தில் இருந்து வெறும் 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறுகிய சந்து ஒன்றில், தாயும் அவரது சிறு குழந்தையும் நடந்து சென்றபோது அரங்கேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையில் கூர்மையான ஆயுதங்களை ஏந்திய கொள்ளையர்கள், அந்தத் தாயைச் சூழ்ந்துகொண்டு பொருட்களைப் பறிக்க முயன்றுள்ளனர். தன் பிஞ்சுக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அந்த வீராங்கனைத் தாய் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு உயிருக்குப் பயந்து ஓடியுள்ளார். ஆனால் இரக்கமற்ற அந்தக் கொடூர நபர், அவர்கள் பின்னாடியே துரத்திச் சென்றுள்ளார். பயத்தில் குழந்தை கீழே விழுந்தபோதும், தாய் அவனை முன்னோக்கி இழுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.
हे भगवान ये क्या हुआ 😱
अपने बच्चे को बचाने के लिए एक माँ ने अपनी पूरी ताकत लगा दी
यह घटना है पंजाब में जालंधर की है जहां से पुलिस स्टेशन महज 600 मीटर दूर है
जहाँ एक माँ अपने छोटे बच्चे के साथ एक संकरी गली से जा रहीं थीं तभी हमलावरों ने उसे घेर लिया और धारदार हथियार लहराते… pic.twitter.com/HiR1CwPKCT— Sanju (@SanjuKu79832010) August 8, 2026
தாயின் தொடர் போராட்டத்தையும் மீறி, அந்தப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, தயார் நிலையில் இருந்த தனது கூட்டாளியுடன் அந்தப் போக்கிரி தப்பி ஓடிவிட்டான். அந்தத் தாயின் நெஞ்சைப் பிளக்கும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் குற்றவாளிகள் தப்பித்துச் சென்றுவிட்டனர். இச்சம்பவத்தின் பகீர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காவல் நிலையத்திற்கு மிக அருகில், அதுவும் மாலையிலேயே இவ்வளவு கொடூரமான குற்றங்கள் அச்சமின்றி நடப்பது, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்ற கேள்வியையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் எழுப்பியுள்ளது.
