LATEST NEWS
ஐயோ கடவுளே..! மகளுடன் சிரித்து விளையாடிய தந்தை.. அடுத்த நொடியே நடந்த பேரதிர்ச்சி.. உலகையே அழவைத்த வீடியோ..!!
காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன தந்தை ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலின் தொடர் வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கு இடையே அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் சந்திக்க நேரிட்டுள்ள கொடூரமான நிஜ வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். தனது சிறிய மகள் ரஃபீஃபிற்கு (Rafif) சில மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் மகளுடன் சேர்ந்து சிரித்து, விளையாடி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.
⚠️WATCH THE VIDEO UNTIL THE END.
🚨Heart Wrenching: A Palestinian father from Gaza documents a reality that every family in the Strip has been forced to live through for nearly three years under Israel’s relentless violence.
Just moments earlier, there was laughter, joy, and… pic.twitter.com/llxGqgMweL— Gaza Notifications (@gazanotice) August 8, 2026
ஆனால், அடுத்த சில வினாடிகளில் அனைத்தும் தலைகீழாக மாறின. இஸ்ரேலின் திடுக்கிடும் குண்டுவெடிப்புச் சத்தங்கள், அதிரும் சுவர்கள், நடுங்கும் கட்டிடங்கள் எனச் சில நொடிகளிலேயே அந்த வீட்டின் மகிழ்ச்சி மறைந்து, சுற்றிலும் பயமும் பீதியும் சூழ்ந்து கொண்டன. இந்தத் துயரச் சம்பவம் காசாவில் மக்கள் அனுபவிக்கும் அன்றாட அச்ச நிலையை உலகிற்கு மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
