சபல புத்தி ஆண்களுக்கு ஆபாச வலை… ஆன்லைன் சாட்டிங்கில் மயக்கி… ரூ.6 கோடி பண மெத்தையில் மிதந்த… உ.பி. இளம்பெண் கைது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சபல புத்தி ஆண்களுக்கு ஆபாச வலை… ஆன்லைன் சாட்டிங்கில் மயக்கி… ரூ.6 கோடி பண மெத்தையில் மிதந்த… உ.பி. இளம்பெண் கைது..!!

Published

on

சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் செயலிகள் மூலமாக இளைஞர்கள் தவறான வழிகளில் திசைமாறி சென்று கொண்டிருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற இளம்பெண் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் பணத்தை சுருட்டியுள்ளார். இவர் பல்வேறு பெயர்களில் போலி சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்கி, முகம் தெரியாத ஆண்களிடம் சாட்டிங்கில் பேசி, ஆபாசமாகப் பேசி வசப்படுத்தியுள்ளார். பின்னர் அவர்களைத் தனியறைகளுக்கு அழைத்துச் சென்று, அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாகப் படம் பிடித்து மிரட்டி வந்துள்ளார்.

தனது வலையில் விழும் வசதி படைத்த ஆண்களிடம் ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டி, இதுவரை சுமார் ரூ.6 கோடி வரை இவர் பறித்துள்ளது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பணத்தை வீட்டில் மெத்தையாக அடுக்கி அதில் படுத்து உறங்குவது போன்றும், துப்பாக்கியுடன் போஸ் கொடுப்பது போன்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இவர் கேட்கும் பணத்தைத் தர மறுக்கும் ஆண்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குகளைப் போட்டு ஏற்கனவே 5 பேரைச் சிறையில் அடைத்துள்ளார். இதனால் பயந்துபோன பல பெரிய மனிதர்கள் தங்களின் மானத்திற்குப் பயந்து கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளனர்.

Advertisement

சுவீட்டி திவாரி என்ற பெயரிலும் போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்ட இவருக்கு, இரு தோழிகளும் இரண்டு ஆண் நண்பர்களும் உதவியாக இருந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் முன்பின் தெரியாத அறிமுகமில்லாத நபர்களிடம் பழகினால் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்க நேரிடும் என்றும், எனவே ஆன்லைனில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அம்மாநில போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in