LATEST NEWS
செம ஷாக்..! தவெக அரசுக்கு ஆதரவு.. ஆனா தமிழ்நாட்டுல குதிரை பேரம் நடக்குது… அதிரடி குண்டைத் தூக்கிப் போட்ட சிபிஐ வீரபாண்டியன்..!!
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான குதிரை பேரம் நடத்தப்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். பொதுவாக வட மாநிலங்களில் மட்டுமே அரங்கேறும் இத்தகைய குதிரை பேர அரசியல் கலாச்சாரம், தற்போது தமிழகத்திற்கும் பரவியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் இந்த ஆபத்தான போக்கைத் தொடக்கத்திலேயே தடுப்பது மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் சிபிஐ கட்சியின் மூத்த தலைவரே இந்த அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையும் அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், சமீபகாலமாகத் தவெக மற்றும் பிற முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு இடையே நிலவி வரும் எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவல் விவகாரங்களை மையப்படுத்தியே மு.வீரபாண்டியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
