“சார், தோள் மேல கை போடுங்க” – மருத்துவரின் அன்பான வேண்டுகோள். சற்றும் தயங்காமல் தோள் கொடுத்த முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சார், தோள் மேல கை போடுங்க” – மருத்துவரின் அன்பான வேண்டுகோள். சற்றும் தயங்காமல் தோள் கொடுத்த முதல்வர் விஜய்..!!

Published

on

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு புதிய மருத்துவர்களுக்குப் பணி ஆணைகளை வழங்கினார். அப்போது, அவர் புதிய மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் சுவராசியமாகவும் மகிழ்ச்சியாகவும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அந்தத் தருணத்தில் அங்கிருந்த ஒரு மருத்துவர், முதலமைச்சரிடம் மிகுந்த அன்போடு, “சார், தோள் மேல கை போடுங்க” என்று ஒரு நெகிழ்ச்சியான கோரிக்கையை முன்வைத்தார்.

அந்த மருத்துவரின் அன்பான வேண்டுகோளைக் கேட்ட முதலமைச்சர் விஜய், சற்றும் தயங்காமல் தன் முகத்தில் புன்னகை மலர, உடனடியாக அந்த மருத்துவரின் தோள் மீது கை போட்டுப் புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தார். முதலமைச்சரின் இந்த எளிமையான மற்றும் கனிவான அணுகுமுறை விழா அரங்கில் இருந்த அத்தனை மருத்துவர்களையும், அதிகாரிகளையும் நெகிழ்ச்சியிலும் பெரும் உற்சாகத்திலும் ஆழ்த்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in