உச்சக்கட்ட விறுவிறுப்பு.! ஸ்டாலினின் ரகசிய ‘ஆபரேஷன்’..! தவெக பெரும்பான்மைக்கு செக் வைக்க திமுக அதிரடி மாஸ்டர் பிளான்… முந்திக்கொள்ளும் விஜய்.. முடக்கப் பார்க்கும் திமுக..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சக்கட்ட விறுவிறுப்பு.! ஸ்டாலினின் ரகசிய ‘ஆபரேஷன்’..! தவெக பெரும்பான்மைக்கு செக் வைக்க திமுக அதிரடி மாஸ்டர் பிளான்… முந்திக்கொள்ளும் விஜய்.. முடக்கப் பார்க்கும் திமுக..!!

Published

on

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பலத்தைக் குறைக்க திமுக அதிரடி அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மையின்றி 107 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த பலவீனமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி, சட்டமன்றத்தில் தவெகவின் பலத்தை அதிகரிக்க விடாமல் தடுக்க திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகள் என மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளன. மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையலாம் என்பதால் காலியாகும் தொகுதிகளின் எண்ணிக்கை 10-க்கும் மேல் உயர வாய்ப்புள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் தவெக 118 என்ற தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டி, கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி நிலையான ஆட்சியை அமைக்க இலக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

தவெகவின் தனிப்பெரும்பான்மை கனவைத் தகர்க்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக ரகசிய ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது. காலியாக உள்ள அனைத்து இடங்களிலும் முழு பலத்துடன் களம் கண்டு, தவெகவை வீழ்த்தி தவெக கூட்டணியில் உள்ள அதிருப்தி கட்சிகளின் ஆதரவைப் பெறவும் திமுக திட்டமிட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தல் வெறும் தொகுதிப் போட்டியாக இல்லாமல், தமிழக அரசியலின் அடுத்தகட்ட அதிகாரச் சமநிலையைத் தீர்மானிக்கும் முக்கிய களமாக அமையவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in