“பீஸ் வாங்குறீங்கள்ல.. அப்புறம் என்ன..? ஹோம்வொர்க் கொடுங்க..!” ஆசிரியரையே அதிரவைத்த சுட்டிப் பையனின் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பீஸ் வாங்குறீங்கள்ல.. அப்புறம் என்ன..? ஹோம்வொர்க் கொடுங்க..!” ஆசிரியரையே அதிரவைத்த சுட்டிப் பையனின் வைரல் வீடியோ..!!

Published

on

சமூக ஊடகங்களில் வகுப்பறை தொடர்பான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பள்ளி மாணவன் ஒருவன் தனது ஆசிரியரிடம் வீட்டுப்பாடம் கேட்டு அடம் பிடிக்கும் சுவாரசியமான காட்சி இடம்பெற்றுள்ளது. பொதுவாகப் பள்ளி மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் இருக்கவே விரும்புவார்கள். ஆனால், இந்த வீடியோவில் உள்ள சிறுவன் தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்று தனக்கு இன்னும் கூடுதல் வீட்டுப்பாடம் தருமாறு கேட்கிறான்.

ஏற்கனவே இரண்டு முறை வீட்டுப்பாடம் கொடுத்துவிட்டதால், அதற்கு மேல் தர முடியாது என்று ஆசிரியர் அன்போடு கூறி, சிறுவனை அவனது இடத்திற்குச் சென்று உட்காரச் சொல்கிறார். ஆனால், அந்த இடத்தை விட்டு நகர மறுத்த சிறுவன், மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆசிரியரைப் பார்த்து, “அப்புறம் எதற்கு எங்களிடம் கட்டணம் வாங்குகிறீர்கள்? வீட்டுப்பாடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்” என்று மழலை மாறாமல் சாமர்த்தியமாகக் கேட்கிறான். சிறுவனின் இந்த எதிர்பாராத பேச்சைக் கேட்டு வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் பலத்த சிரிப்பொலி எழுப்பினர்.

Advertisement

https://www.instagram.com/reel/DamQ9grj_Qq/?utm_source=ig_web_button_share_sheet

சிறுவனின் இந்த வித்தியாசமான கேள்வியைக் கேட்டு சில நொடிகள் திகைத்துப் போன ஆசிரியர், பின்னர் புன்னகையுடன், “நாங்கள் வாங்கும் கட்டணம் வீட்டுப்பாடம் கொடுப்பதற்காக அல்ல, உங்களுக்குப் பாடம் சொல்லித்தருவதற்காக” என்று விளக்கமளித்தார். இந்தச் சுவாரசியமான உரையாடல் அடங்கிய வீடியோ, இன்ஸ்டாகிராமில் @vkraj_1999 என்ற கணக்கில் பகிரப்பட்டு, இதுவரை 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in