CINEMA
“அடடே நயன் மேடம்… இது என்ன புது லுக்..? ‘டாக்சிக்’ வெற்றிக்காக திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்… பின்னணியில் உள்ள உண்மை இதுதான்..!!
யஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “படத்துக்காக நயன்தாரா இப்படி ஒரு வேண்டுதலா?” என்று ஆச்சரியமடைந்தனர். ஆனால், இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல; கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தபோது நயன்தாரா எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை எடிட் செய்து பகிர்ந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் AI மற்றும் பல்வேறு புகைப்பட எடிட்டிங் தொழில்நுட்பங்கள் மூலம் ஒருவரது தோற்றத்தையே எளிதாக மாற்றிவிட முடிகிறது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை போலவே தோன்றுவதால், பலரும் அவற்றை நம்பி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வலுத்து வருகின்றது. இப்படத்தில் யஷின் சகோதரியாக நயன்தாரா நடித்திருப்பதாகவும், இதற்காக அவருக்கு சுமார் ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் கீது மோகன்தாஸும், நயன்தாராவும் நல்ல நண்பர்கள் என்பதால், இந்தக் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
