காஞ்சனா 4″ படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்?…இரட்டை குழந்தைகளுக்குத் தாயான பின் நயன்தாரா எடுத்த விஸ்வரூபம்…நயன்தாராவின் செம பிளான்… மூக்குத்தி அம்மனைத் தொடர்ந்து ரசிகர்களுக்குக் காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்…! – cinefeeds
Connect with us

CINEMA

காஞ்சனா 4″ படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்?…இரட்டை குழந்தைகளுக்குத் தாயான பின் நயன்தாரா எடுத்த விஸ்வரூபம்…நயன்தாராவின் செம பிளான்… மூக்குத்தி அம்மனைத் தொடர்ந்து ரசிகர்களுக்குக் காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்…!

Published

on

தமிழ் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து, வாடகைத் தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளுக்குத் தாயான பிறகும், திரைத்துறையில் தொடர்ந்து செம பிஸியாக வலம் வருகிறார். பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, அவருக்கு இந்திப் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ‘வாரிசு’ பட இயக்குநர் வம்சி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் மட்டுமின்றி தமிழிலும் நயன்தாராவின் கைவசம் பல சுவாரசியமான திரைப்படங்கள் உள்ளன. அவரது நடிப்பில் ‘மண்ணாங்கட்டி’, ‘ராக்காயி’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் ‘டாக்ஸிக்’ திரைப்படமும் விரைவில் வெளியாக தயாராகி வருகிறது. இதுதவிர, ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்நிலையில், நயன்தாரா குறித்து கோலிவுட் வட்டாரத்தில் ஒரு புதிய அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பேய் பட வரிசையான ‘காஞ்சனா’வின் நான்காவது பாகத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் திருப்புமுனையாக அமையும் ஒரு பிளாஷ்பேக் காட்சியில் நயன்தாரா தோன்றவுள்ளதாகவும், ஆனால் அவர் பேய் வேடத்தில் நடிக்கிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் தெரிகிறது. முதன்முறையாக காஞ்சனா சீரிஸில் நயன்தாரா இணையவுள்ள செய்தி காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in