CINEMA
கேவலமா இல்லையா..? 24 மணி நேரமும் த்ரிஷா த்ரிஷா-ன்னு அலையுறாங்க.. எதுக்குப்பா என்னை வம்புக்கு இழுக்குறீங்க.. சீமான் ஆதரவாளர்களைக் கிழித்துத் தொங்கவிட்ட நடிகை விஜயலட்சுமி…!!
சீமான் ஆதரவாளர்கள் தேவையில்லாமல் தன் பெயரை அவதூறு விவாதங்களில் இழுப்பதாக நடிகை விஜயலட்சுமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தம்பிகள் மற்றும் ஆதரவாளர்கள், சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக எழும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறிக்கொண்டு, தன்னை வம்புக்கு இழுப்பதாக அவர் வீடியோ ஒன்றின் மூலம் தனது ஆக்ரோஷமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் த்ரிஷா தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சீமான் ஆதரவாளர்கள் எந்நேரமும் த்ரிஷாவின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பதாக விஜயலட்சுமி சாடியுள்ளார். மேலும், “யாராவது த்ரிஷாவைப் பற்றித் தவறாகப் பேசினால், அதற்குப் போட்டியாக நாங்கள் விஜயலட்சுமியைப் பற்றித் தவறாகப் பேசுவோம்” என்று சீமானின் ஆதரவாளர்கள் மிரட்டல் தொனியில் பதிவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய போக்கு தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள விஜயலட்சுமி, “என்னை எதற்காக இந்த விவகாரத்திற்குள் இழுக்கிறீர்கள், உங்களுக்குக் கேவலமாக இல்லையா?” என நெற்றிக்கண்ணைத் திறந்து கேள்வி எழுப்பியுள்ளார். சம்பந்தமே இல்லாத விஷயங்களில் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் சீமான் ஆதரவாளர்களின் இந்தச் செயலை அவர் வன்மையாக விமர்சித்துள்ளார்.
