CINEMA
“இவர்தான் பெஸ்ட் ஹஸ்பண்ட்..!” மனம் திறந்து பேசிய பிரபல நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் பேட்டி.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!
நடிகை திரிஷாவின் பொது நிகழ்வுப் பங்கேற்புகள் குறித்த விவாதங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மற்றொரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த நேர்காணலின் போது தொகுப்பாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள அவர், தனது விருப்பமான நடிகராக அஜித்தையும், சிறந்த உடலமைப்பு கொண்ட நடிகராக ஹிருத்திக் ரோஷனையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
Favourite Actor: AJITH 🤩
Mr Body Perfect: HRITHIK 😎
Best Celebrity Husband: AJITH 😉
Time God! 🙏 Ajith Ayya Escaped 😂🏃🏻 pic.twitter.com/diJo5Qlu8A— Arjunan 🏹👑 (@_ImJishnu) August 15, 2026
குறிப்பாக, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களில் சிறந்த கணவர் யார் என்ற கேள்விக்குச் சற்றும் தாமதிக்காமல் நடிகர் அஜித்தின் பெயரைக் குறிப்பிட்டுள்ள அவர், சிறந்த மனைவிக்கான உதாரணமாக ஷாலினி அஜித்தைக் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களது குடும்ப வாழ்க்கை மற்றும் பரஸ்பர அன்பு குறித்த அவரது இந்தப் பாராட்டுப் பேட்டி தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருவதோடு, ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
