மருத்துவரா இல்லை ரவுடியா..? “யாரிடம் வேணா போய் சொல்லிக்கோங்க… வைத்தியம் பார்க்க முடியாது..” அரசு மருத்துவரின் கொடூரப் பேச்சு… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மருத்துவரா இல்லை ரவுடியா..? “யாரிடம் வேணா போய் சொல்லிக்கோங்க… வைத்தியம் பார்க்க முடியாது..” அரசு மருத்துவரின் கொடூரப் பேச்சு… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன கொட்டேகல்லா அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்து மருத்துவர் ஒருவர் அலட்சியமாகவும் மரியாதையற்ற முறையிலும் நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவமனையில் போதிய கவனிப்பு அளிக்கப்படாததால், அவரது உறவினர்கள் மருத்துவரிடம் சென்று உடனடியாகச் சிகிச்சை அளிக்குமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ఎవరికి చెప్పుకుంటారో చెప్పుకోండి… నేను వైద్యం చేయను

ఏపీ ప్రభుత్వ ఆసుపత్రిలో డాక్టర్ దురుసు ప్రవర్తన

తిరుపతి జిల్లా చిన్న గొట్టిగల్లు ప్రభుత్వ ఆసుపత్రిలో ఘటన

రోగులను పట్టించుకోకుండా ఉండడంతో వైద్యం చేయాలని డాక్టర్‌ను కోరిన బంధువులు

వైద్యం చేయను.. ఎవరికి చెప్పుకుంటారో… pic.twitter.com/K0nvFPTJat— Telugu Scribe (@TeluguScribe) August 5, 2026

ஆனால், அவர்களின் கோரிக்கையைப் பொருட்படுத்தாத அந்த மருத்துவர், “நான் சிகிச்சை அளிக்க முடியாது.. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள்!” என்று மிகவும் அலட்சியமான முறையில் பதிலளித்துள்ளார். அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நோயாளியைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவoffical -இன் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு மற்றும் கோபமான நடத்தை தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in