CRIME
கொடூரத்தின் உச்சம்…! “கணவனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு ஜாலியா வாழலாம்…” கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் பிளான்… பெற்ற குழந்தைகளைக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!!
கள்ளக்காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், தன் விபரீத ஆசையால் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சீரழித்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தொடர்பு குறித்துக் கணவருக்குத் தெரியவந்ததும், அவர் மனைவியின் கள்ளக்காதலனைச் சட்டத்தின் முன் நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இதையறிந்த அப்பெண், தன் கள்ளக்காதலனைக் காப்பாற்றவும், கணவனைப் பழிவாங்கவும் துணிந்து, பெற்ற இரு மகன்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக்கொலைப்பழியைக் கணவர் மீது போட்டு அவரைச் சிறைக்கு அனுப்பிவிட்டால், தானும் கள்ளக்காதலனும் எவ்விதத் தடையுமின்றி வாழலாம் எனக் கணக்கு போட்டுள்ளார்.
ஆனால், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், பெண்ணின் தந்திரமான நாடகத்தை உடைத்து, உண்மையை அம்பலப்படுத்தினர். பெற்ற பிள்ளைகளைக் கொன்ற கொடூரப் பெண்ணையும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தகாத உறவின் மோகத்தால் பூத்துக் குலுங்க வேண்டிய ஒரு குடும்பம் முற்றிலுமாக அழிந்து போயுள்ளது. தீய எண்ணங்களும் தவறான பாதையும் எப்போதுமே பேராபத்தையும் அழிவையுமே தரும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு கசப்பான சான்றாகும்.
