“2029-லேயே தேர்தலா?.. திமுகவுக்கு பாஜக விரித்த மெகா வலை… விழுந்தால் விபரீதம்”.. கார்த்தி சிதம்பரம் போட்ட பகீர் குண்டு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“2029-லேயே தேர்தலா?.. திமுகவுக்கு பாஜக விரித்த மெகா வலை… விழுந்தால் விபரீதம்”.. கார்த்தி சிதம்பரம் போட்ட பகீர் குண்டு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் இந்த முறை இறுதி முடிவு எட்டப்படலாம் எனத் தெரிகிறது. ஜூலை 20-ல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆகஸ்ட் 15 வரை இக்கூட்டத்தொடர் நீடிக்க உள்ளது. இதற்கிடையே, சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இந்த விவகாரங்களில் திமுகவுக்கு பாஜக தரப்பிலிருந்து ஆசை வார்த்தைகளும் அழுத்தங்களும் வருவதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆகிய திட்டங்களை ஒப்புக்கொண்டால், ஐந்து ஆண்டுகள் காத்திருக்கத் தேவையின்றி 2029-லேயே தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும் என பாஜக தூண்டில் போடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஜக காட்டும் இந்த ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி திமுக தனது தற்போதைய நிலையை மாற்றிக்கொண்டால், அவர்களுக்குப் பாரிய விபரீதங்கள் ஏற்படும் என கார்த்தி சிதம்பரம் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் தற்போதைய தேர்தல் முடிவுகளை விட மோசமான விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் தவெக கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், தவெகவுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த ஆபத்தான பாதையில் திமுக செல்லக் கூடாது என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in