“அவருக்குக் கொடுக்காதீங்க… எனக்குதான் உடம்பு சரியில்ல… எனக்கே பணம் குடுங்க…!” மருந்துச் சீட்டுகளைக் காட்டி மல்லுக்கட்டிய பெண்… பதிலுக்கு வெளிநாட்டவர் செஞ்ச காரியத்தை பாருங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவருக்குக் கொடுக்காதீங்க… எனக்குதான் உடம்பு சரியில்ல… எனக்கே பணம் குடுங்க…!” மருந்துச் சீட்டுகளைக் காட்டி மல்லுக்கட்டிய பெண்… பதிலுக்கு வெளிநாட்டவர் செஞ்ச காரியத்தை பாருங்க..!!

Published

on

மும்பையில் வெளிநாட்டு இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஒருவர், மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர் ஒருவருக்குப் பணம் கொடுத்தபோது, மற்றொரு பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கிரிஸ் டிராவல்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், இன்ப்ளூயன்சர் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.100 பணத்தை வழங்குகிறார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் பேசி, தனக்கும் உடல்நலக் குறைபாடு இருப்பதாகக் கூறி சில ஆவணங்களையும் மருந்துகளையும் காண்பித்து, உணவு மற்றும் சிகிச்சைக்காகத் தனக்கே பணம் தேவை என உரிமை கோருகிறார்.

இதனைத் தொடர்ந்து, அந்த இன்ப்ளூயன்சர் மாற்றுத்திறனாளி நபரிடம் அவரது நிலையைப் பற்றி விசாரித்தார். அப்போது தனக்கு போலியோ பாதிப்பு இருப்பதாக அந்த நபர் கூறியதுடன், நடமாட முடியாத நிலையில் இருப்பதும் தெரிந்தது. இருப்பினும், அந்தப் பெண் குறுக்கிட்டு, அந்த நபர் தினமும் பிச்சை எடுத்து நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2,000 வரை சம்பாதிக்கக்கூடும் என்று குற்றம் சாட்டினார். இதனால் இருவருக்கும் இடையே விவாதம் சூடானது.

Advertisement

https://www.instagram.com/reel/DcIwS8EMXYV/?utm_source=ig_web_button_share_sheet

ஆனாலும், அந்த இன்ப்ளூயன்சர் தான் அந்த நபருக்கு உதவ எடுத்த முடிவைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசினார். அந்த நபரின் பரிதாப நிலையைக் சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பெண்ணும் இதே போன்ற சூழ்நிலையில் இருந்தால் நிச்சயம் உதவி செய்திருப்பேன் என்று கூறினார். மேலும், அந்த மாற்றுத்திறனாளி நபருக்கு கூடுதலாக ரூ.100 வழங்கி, மொத்தம் ரூ.200 தொகையைக் கொடுத்தார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள கிரிஸ், மும்பையில் அந்த நபரைப் பார்த்தபோது அவருக்கு உண்மையிலேயே உதவி தேவை எனத் தோன்றியதாகக் குறிப்பிட்டு, “நீங்கள் இந்தச் சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று பார்வையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in