CINEMA
“என்னோட முதல் சாய்ஸ் என் அப்பாதான்” தந்தை முதலமைச்சர் விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்… அப்பாடா பிரச்சனையெல்லாம் ஓய்ந்தது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!
ஹாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் தனது தந்தை விஜய் தான் எப்போதும் தனது முதல் தேர்வாக இருப்பார் என்று ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் விளம்பர நிகழ்வு ஒன்றில் அவர் கலந்துகொண்டு பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரிடம், “உங்கள் பெயரைக் கொண்ட பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் ஜேசன் ஸ்டேதம் ‘சிக்மா’ படத்தைப் பார்த்துவிட்டு, உங்களை ஹாலிவுட் படம் இயக்க அழைத்தால் இந்தியாவிலிருந்து எந்த நடிகரை அழைத்துச் செல்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குச் சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ஜேசன் சஞ்சய், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது எனது அப்பா தான். நாங்கள் இருவரும் இணைந்தால் அது ஒரு அட்டகாசமான மாஸ் கூட்டணியாக அமையும். நான் சொல்லும் இந்த கருத்து எப்படியாவது நடிகர் ஜேசன் ஸ்டேதமைச் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன்” எனக் கலகலப்பாகப் பேசினார்.
மேலும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடந்தபோது, தனது தந்தை விஜய்யின் தோள் மீது அமர்ந்துகொண்டு சிறுவனாகப் போட்டிகளைக் கண்டு ரசித்த பழைய நினைவுகளையும் அவர் இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். சினிமாவைத் தாண்டி அரசியல்வாதியாகவும் பிஸியாக இருக்கும் தந்தை விஜய் குறித்து, மகன் ஜேசன் சஞ்சய் பெருமையாகவும் பாசத்தோடும் பேசியுள்ள இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் மிக வேகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
