LATEST NEWS
நிப்பாட்டுங்க..! திடீரென நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்த சொன்ன முதல்வர் விஜய்… பதறியடித்து இறங்கிய அதிகாரிகள்… அடுத்து நடந்த சம்பவம்… ச்ச இப்படியொரு தலைவனா..? குவியும் பாராட்டுக்கள்..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாலையில் காத்திருந்த மாற்றுத்திறனாளி தொண்டர்களைப் பார்த்தவுடன் தனது பிரச்சார வாகனத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார் . தவெக வேட்பாளர்களை ஆதரித்துப் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவர், பாதுகாப்புப் புரோட்டோகால்களைக் கடந்து இந்த நெகிழ்ச்சியான காரியத்தைச் செய்துள்ளார் .
மதுராந்தகம் பகுதியில் சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த ரோடு ஷோவின் போது, தங்களைச் சந்திக்க மாற்றுத்திறனாளிகள் சிலர் சக்கர நாற்காலியுடன் (Wheelchair) சாலையோரம் நீண்ட நேரமாகக் காத்திருப்பதை முதலமைச்சர் விஜய் கவனித்துள்ளார் . உடனே தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்த அவர் , அந்தத் தொண்டர்களை நேரில் சந்தித்துக் கைகுலுக்கி, அவர்களின் நலம் குறித்து மிகவும் அன்போடு விசாரித்துள்ளார் . மேலும் அதனையடுத்து அவர்களின் முகவரி மற்றும் விவரங்களை கேட்டு பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்கிருந்த மக்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் இயல்பாகப் பேசிய முதலமைச்சர் விஜய், அங்கிருந்த ஒரு பச்சிளம் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தி கொஞ்சி மகிழ்ந்துள்ளார் . எளிய மக்களுடன் அவர் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு உரையாடிய இந்த உணர்வுப்பூர்வமான தருணங்கள் அடங்கிய வீடியோக்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே மிக வேகமாக வைரலாகி வருகின்றன
