CINEMA
அப்பாவின் அரசியல் வெற்றி எங்களுக்கு பெருமை”.. வதந்திகளுக்கு எண்டு கார்டு போட்ட ஜேசன் சஞ்சய்.. வைரலாகும் முதல்வர் விஜய்யின் மகன் பேட்டி..!!
முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், தனது முதல் திரைப்படத்தின் விளம்பரப் பணிகளின் போது அளித்து வரும் பேட்டிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, குடும்பத்தில் பிரச்சனை, பிள்ளைகளுடன் நெருக்கம் இல்லை, குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கிறார் போன்ற தன் தந்தையைப் பற்றி பரப்பப்பட்ட பல்வேறு வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் அவர் மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். தனது தந்தையின் பிரம்மாண்டமான அரசியல் வெற்றி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பெரும் பெருமையையும் சந்தோஷத்தையும் அளித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் பேசிய ஜேசன் சஞ்சய், மக்கள் தன் தந்தை மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் பார்க்கும் போது, தாங்களும் சமூகத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதாகக் கூறியுள்ளார். தான் சினிமாவுக்கு வந்தது தந்தையை நகல் எடுக்கவோ, அவரை விடப் பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காகவோ இல்லை என்றும், தனக்கான அடையாளத்தை உருவாக்கவே முழு கவனத்தையும் செலுத்துவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். தந்தை தமக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும், எந்தவொரு காரியத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை அவரிடமிருந்தே கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் வாய் திறந்தால் விஜய்யின் பிம்பம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்த்த எதிர்ப்பாளர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பேட்டிகள் அமைந்துள்ளன. தன் தந்தையின் வழிகாட்டலையும் ஆதரவையும் வெளிப்படையாகப் பாராட்டிப் பேசியுள்ளதன் மூலம், விஜய் மீதான குடும்பக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் ஜேசன் சஞ்சய்யின் இந்த பேட்டி வீடியோக்களை இணையத்தில் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
